விஜய் சேதுபதியுடன் இணையும் "குக் வித் கோமாளி" புகழ்..!!

It has been reported that Vijay Sethupathi will be playing the lead role in the 46th film 'Cook With Clown'.

விஜய் சேதுபதியின் 46 வது படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 46 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.

இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.