விஜய் சேதுபதியுடன் "குக் வித் கோமாளி" புகழ்..! வைரலாகும் புகைப்படம்..!!

The photo taken during the shooting of Vijay Sethupathi's 46 film is going viral

விஜய் சேதுபதியின் 46 படத்திற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 46 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.

இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்த்து இந்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வரும் புகழ் நடிப்பதாக சமீபத்தில் தகவல் பரவி வந்த நிலையில் அதனை உறுதி படுத்தும் வகையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் புகழ் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

unknown node