வெளிநாடு சென்று மீண்டும் சென்னை திரும்பிய தளபதி ! வீடியோவுடன் இதோ !

நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படத்திற்காக தான் தற்போது அவரது ரசிகர்கள் வெய்ட்டிங்.இந்நிலையில் விஜய் அடுத்ததாக "தளபதி 64"

நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படத்திற்காக தான் தற்போது அவரது ரசிகர்கள் வெய்ட்டிங்.இந்நிலையில் விஜய் அடுத்ததாக “தளபதி 64” படத்தில் “கைதி” படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் களமிறங்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் பற்றிய அப்டேட்டுகளும் தற்போது தொடர்ந்து வெளியாகி வருகிறது.இந்நிலையில் விஜய் “பிகில்” படத்தில் 100 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து  கொண்டார் என்றும் பல தகவல்கள் வெளியானது. இதையடுத்து விஜய் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவிலும் கலந்து கொண்டு மாஸாக பேசி அவரது ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்ற விஜய் தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.தற்போது அந்த விடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 2 ந் தேதி தொடங்க இருக்கிறது.அந்த படப்பிடிப்பில் விஜய் தற்போது கலந்து கொள்ள தான் சென்னை திரும்பியுள்ளார் என்று தெரிகிறது.

unknown node