தளபதி 65 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்..??

It has been reported that famous Malayalam actor and assistant director Shine Tom Sacco will play the lead role in Commander 65.

தளபதி 65 படத்தில் பிரபல மலையாள நடிகரும் உதவி இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தனர்.

இந்நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த ஷாப்பிங் மால் செட்டை அயல்நாட்டு ஷாப்பிங் மால்களுக்கு இணையாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகரும் உதவி இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node