கோப்ரா படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்..!!

Director Gyanamuthu has released a new photo of the upcoming Cobra movie starring Vikram.

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தின் புதிய புகைப்படத்தை இயக்குன ஞானமுத்து  வெளியிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதனை இயக்குனர்  அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.  7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான், சர்ஜனோ காலித், மியா ஜார்ஜ், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by R Ajay Gnanamuthu (@aj_gnanamuthu)