#CinemaBreaking: அண்ணாத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்...? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

It has been officially announced that Jegapathi Babu will play the lead role in the movie Annatha

அண்ணாத்த படத்தில் ஜெகபதி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்கு படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதனுடன் ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வருகிறார்.அதன் பிறகு படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

இந்த நிலையில் சென்னையில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி நேற்று முதல் தொடங்கிய அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் ஜெகபதி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node