சென்னை :நடிகை கௌரி கிஷன், ’96’ படத்தின் ஃப்ளாஷ்பேக் போர்ஷனில் யங் ஜானு ரோலில் நடித்து பிரபலமானவர். ‘அதர்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு யூடியூபர் அவரை அவமானப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட அதே கேள்வியை மீண்டும் எழுப்பி, அதை நியாயப்படுத்திய யூடியூபருக்கு கௌரி கிஷன் தக்க பதிலடி கொடுத்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆகியுள்ளது.
அந்த யூடியூபர் நடிகரை நோக்கி, “நடிகையைத் தூக்கியுள்ளீர்கள், அவரது எடை எவ்வளவு?” என்று கேட்டார். இது தவறு இல்லை என்று வாதிட்ட அவர், “விளையாட்டாகத்தான் கேட்டேன். சினிமா நட்சத்திரங்களிடம் இந்திய பொருளாதாரம், உலக அரசியல் கேட்க முடியுமா? கௌரி கிஷன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார். மற்றொரு பத்திரிகையாளரும் அவருக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால் அரங்கில் கௌரி கிஷனுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை.கௌரி கிஷன் தைரியமாகப் பதிலளித்தார்.
மேலும், “உங்கள் கேள்வி மிகவும் முட்டாள்தனமானது. எனது எடையைத் தெரிந்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? படத்துக்கும் என் எடைக்கும் என்ன தொடர்பு? எடை குறித்த கேள்விகள் எப்போதும் நடிகைகளை நோக்கியே வருகின்றன. எனக்கு உடல் சார்ந்த என்ன பிரச்னைகள் உள்ளன என்று தெரியுமா? எனது கதாபாத்திரம் குறித்தோ, அதற்காக நான் எடுத்த முயற்சி குறித்தோ ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை. உங்கள் கேள்வி தவறு, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று செமத்தியாக விளாசினார்.
இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாடகி சின்மயி, நடிகர் கவின் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் கௌரி கிஷனைப் பாராட்டி, யூடியூபரை கண்டித்து பதிவிட்டுள்ளார். இது பெண்களுக்கு எதிரான உடல் அவமானக் கேள்விகள் குறித்து பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.கௌரி கிஷனின் தைரியமான பதிலடி, நடிகைகளுக்கு எதிரான அநாகரிக கேள்விகளுக்கு எதிராக ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
Journalism has lost its ground. The so called journos take journalism to the gutters. How much a woman weighs is none of their business. And asking the hero about it?? What a shame! Kudos to the young #GowriShankar who stood her ground and gave it back. Are the same men ok if…
— KhushbuSundar (@khushsundar) November 7, 2025
Inside and out, you’re beautiful and inspiring, Gouri 🙂
Always stay the same 💪🏼@Gourayy ♥️— Kavin (@Kavin_m_0431) November 6, 2025
Gowri did an amazing job. The moment you call out a disrespectful and an unnecessary question – a whole lot of shouting down happens.
So proud that someone so young stood her ground and pushed back.No male actor gets asked what his weight is. No idea why they asked a female… pic.twitter.com/BtKO6U7lpQ
— Chinmayi Sripaada (@Chinmayi) November 6, 2025
@Gourayy more power to you. I strongly condemn the reporter’s actions; they are unacceptable and shameful. That female actors have to still face these indecent questions goes to show the distance Thamizh cinema has yet to go.
pic.twitter.com/tYUo9LH8Zx— pa.ranjith (@beemji) November 7, 2025
