இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் நடித்துள்ள திரைப்படம் “கடுவா”. இந்த படம் வரும் 30-ஆம் தேதி நாளை வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் ஜூலை 7 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeஇந்த நிலையில், படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில், பிருத்விராஜ் , ஷாஜி கைலாஸ் மேலும் பலர் கலந்து கொண்டார்கள். அப்போது பிருத்விராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக பேசிய அவர்” ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரை வைத்து ஒரு முழு நீள காமெடி படத்தில் பார்க்க ரசிகனாக எனக்கு ஆசை உள்ளது. காமெடி சென்ஸுக்காக கமலை கொண்டாடிய அளவுக்கு ரஜினியை நாம கொண்டாடவில்லை. எனவே, எனக்கு ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால், அவரை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்குவேன்.
unknown nodeகமல் சாரின் “பஞ்சதந்திரம்” படத்தைப்போல ரஜினிசாரை வைத்து ஒரு காமெடி படம் இயக்க ஆசை என” கூறியுள்ளார். மேலும் பிரிதிவ்ராஜ். லூசிபர், ப்ரோ டாடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.