நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
unknown nodeCaptainMiller Movie [Image source : twitter / @Trendz_Dhanush ]
இந்த படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சுந்தீப் கிஷன், சிவா ராஜ்குமார், எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளது.
unknown nodeஇதற்கிடையில், தனுஷ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 21-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், கேப்டன் மில்லர் படத்தின் புது அப்டேட் ஒன்று இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் முன்னதாக அறிவித்திருந்தது.
unknown nodeஅதன்படி, கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதமும், படத்தின் டீசர் ஜூலை மாதமும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது அறிவித்துள்ளது.
