கடன் காரணமாக சொந்த வீட்டை விற்கும் கஞ்சா கருப்பு...!!

Cannabis is reportedly being pushed into a crisis situation to the extent of selling one’s own home due to black debt.

கஞ்சா கருப்பு கடன் காரணமாக சொந்த வீட்டை விற்கும் அளவிற்கு நெருக்கடி சூழலில் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவில் நடிகர் கஞ்சா கருப்பு பிதாமகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பருத்திவீரன், ராம், சிவகாசி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு கடைசியாக இவர் கொம்பு என்ற படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை நடிகர் கஞ்சா கருப்பு தயாரித்தார்.

இதில் ஏற்பட்ட கடன் காரணமாக தற்போது கஞ்சா கருப்பு தான் வசிக்கும் சொந்த வீட்டை விற்கும் அளவிற்கு மிகவும் நெருக்கடி சூழலில் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதைபோல் ஒரு பேட்டியில் கஞ்சா கருப்பு  இனிமேல் படத்தை தயாரிக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.