விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகின்ற ஜனவரி மாதம் 13.ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் , விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் மாஸ்டர் படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வருகின்ற ஜனவரி மாதம் 13.ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
unknown node