#BREAKING: பரபரப்பு...பாடகர் யேசுதாஸ் மகன் வீட்டில் நகைகள் கொள்ளை.!

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மை காலங்களாக பிரபலங்களின் வீட்டில் உள்ள தங்க, நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளை போய்கொண்டிருக்கிறது. குறிப்பாக சமீபத்தில், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா  வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து தற்போது  யேசுதாஸ் மகனும் பாடகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை போய் உள்ளது.  இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளதாக சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா யேசுதாஸ் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.