#Breaking : பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. இவர் நேற்று இரவு படப்பிடிப்பு முடித்து விட்டு, இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஈவிபி பிலிம் சிட்டியில் உள்ள ஹோட்டல் ரூமுக்கு வந்துள்ளார். அந்த ரூமில் தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் ஒன்றாக தங்கி இருந்துள்ளார்.
இதனையடுத்து, சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்க செல்வதாகக் கூறி, ரூமிற்கு வெளியே செல்ல சொல்லியுள்ளார். வெகு நேரமானதால் அறையின் கதவை தட்டி பார்த்துள்ளார். கதவை திறக்காததால், ஹோட்டல் ஊழியரிடம் சொல்லியுள்ளார். இந்நிலையில், ஹோட்டல் ஊழியர், மாற்று சாவி எடுத்து வந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மரணம் அவரது ரசிக பெருமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024