தமிழ் நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71
தமிழ் சினிமாவில் நாயகன், குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் சரத்பாபு. இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
unknown nodeஇந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்பாபு உயிரிழந்ததாக வதந்தி தகவல் பரவி வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினர் அவர் நலமுடன் உள்ளார் என்று விளக்கம் கொடுத்தனர்.
unknown nodeஇதனையடுத்து அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் சரத்பாபு 1973 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
unknown nodeஅதனை தொடர்ந்து 1970,1980 களில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர். சரத்பாபு நடிகர்கள் சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஆகியோருடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
