#Breaking: ரஜினி மகள் வீட்டில் திருடிய பெண்ணை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி.!!
ரஜினி மகள் வீட்டில் திருடிய ஈஸ்வரி என்ற பெண்ணை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மகளும், சினிமா திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில் தனது வீட்டு லாக்கரில் வைத்து இருந்த நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள நகை கற்கள் திருடு போயுள்ளதாக கூறியிருந்தார்.
இது குறித்து விசாரணை செய்த போலீசார் பல ஆண்டுகளாக வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்பவரை கைது செய்தனர். ஈஸ்வரிக்கு உதவியாக இருந்த வெங்கடேசன் மற்றோருவர் என ஈஸ்வரியுடன் சேர்த்து 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு பாத்திரம் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், ரஜினி மகள் வீட்டில் திருடிய ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலீசார் 3- நாள் கேட்ட நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது.