ஊடக நெருக்கடியலும் மற்றும் பல கருத்துகளாலும் கட்சி தொடங்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரபல வார இதழில் ஆனா “என்னுள் மையம் கொண்ட புயல்” என்ற தலைப்பில், தொடர் கட்டுரை எழுதி வருகிறார் கமல். அதில், நவம்பர் 7-ம் தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்,என தெரிவித்துருத்தர் அந்த கட்டுரையில், “தயாராகுங்கள், நவம்பர் 7-ல் மொத்தமும் சொல்கிறேன்” என்று கமல் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது தனது பிறந்தநாளில் புதிய கட்சி தொடங்கப்படாது, என தற்போது திடீர் என மறுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது பிறந்தநாளில் நற்பணி இயக்கத்தினர் கூடுவது வழக்கமானது தான் என்றும், பொது அறிவுப்புகளை மக்கள் மன்றத்திலேயே நடைபெறும், என்றும் தெரிவித்துள்ளார். நவம்பர் 7-ம் தேதி, அவரது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் நடிகர் கமல்ஹாசன்.