சேலத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டின் மீது சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் மற்றும் இருசக்கர வாகனம் எரிந்தன.திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருப்பவர் TM செல்வகணபதி. முன்னாள் எம்பியான இவர், சேலம் ராம் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில், இவரது வீட்டின் சில மர்ம நபர்கள் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசினர் இதனால். இதில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் தீயில் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்வகணபதி நேற்று சென்னை சென்று இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. சேலத்தில் திமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள் காரணமாக நேற்று காலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆனா ராஜேந்திரன் ஆதரவாளர்கள் நான்கு பேர் காயமடைந்து சேலம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், செல்வகணபதி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ளது.
தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.
சேலத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டின் மீது சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் மற்றும் இருசக்கர வாகனம் எரிந்தன.திமுக தேர்தல்
unknown node