இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeபடத்தின் டிரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் மத்தியில் படம் பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்த நிலையில், பொன்னின் செல்வன் படத்தின் வசூலை பாதிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், பொன்னியின் செல்வன் வெளியாகும் செப்டம்பர் 30 -ஆம் தேதி கிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கும் வெளியாகிறது.
இதையும் படியுங்களேன்-திடீர் ட்விஸ்ட்… ஒரே படத்தில் இணையும் விஜய் – கமல்.! இயக்குனர் யார் தெரியுமா..?
unknown nodeஇது தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த விக்ரம் வேதா படத்தின் ரீமேக். தமிழில் இயக்கிய அதே இயக்குனர்களான புஷ்கர் &காயத்ரி தன ஹிந்தி ரீமேக்கையும் இயக்கியுள்ளார்கள் . படத்திற்கான மிரட்டலான டிரைலர் கூட இன்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், ஹிந்தியில் விக்ரம் வேதா படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளதால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஹிந்தியில் வசூல் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
unknown node