BIGG BOSS 5 : இந்த வீட்டுல எதாவது சொன்னாலும் தப்பு, சொல்லாவிட்டாலும் தப்பு ....!

Priyanka is shown in the third promo saying that it is wrong to say something in this house, it is wrong not to say it.

இந்த வீட்டில் ஏதாவது சொன்னாலும் தப்பு, சொல்லாமல் இருந்தாலும் தப்பு என பிரியங்கா கூறுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் நீலாம்பரி கதாபாத்திரம் அக்ஷராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முறையாக அக்ஷரா பங்கேற்கவில்லை என இமான் அண்ணாச்சி கூறியது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அக்ஷரா அதற்காக அழுதார். இது குறித்து ராஜுவுடன் பிரியங்கா பேசுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது ராஜு இடையிலேயே சென்றதால் வருத்தமடைந்த பிரியங்கா இந்த வீட்டில் ஏதேனும் சொன்னாலும் தப்பு, சொல்லாமல் இருந்தாலும் தப்பு, சொல்ல நினைத்தாலும் தப்பு என தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node