BIGG BOSS 5 : உங்களுக்கு வந்தது தன்மான கோவம் கூட கிடையாது...!

The third promo shows a video of Kamal questioning Tamara about the criticism that has arisen about the dress.

உடை பற்றி எழுந்த விமர்சனம் குறித்து கமல் சார் தாமரையிடம் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களான இன்று கமல் சார் போட்டியாளர்களிடம் பேசியுள்ளார். அப்பொழுது போட்டியில் இடையில் நடந்த பட்டிமன்றத்தில் பேசப்பட்ட உடையை குறித்த விமர்சனம் குறித்து தாமரைச்செல்வி மற்றும் சிபியிடம் கமல் சார் கலந்துரையாடுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

அதில் தாமரை நான் இது போன்று உடையணிந்து படங்களில் மட்டும் தான் பார்த்துள்ளேன் என கூறுகிறார். அப்பொழுது உங்களுக்கு வந்த கோபம் தன் மான கோவம் கூட கிடையாது என கமல் சார் தாமரையிடம் கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node