BIGG BOSS 5 : யாருக்கு அநியாயம் நடந்தாலும் நான் தட்டி கேட்பேன் ...!

The second promo shows Priyanka telling Tamara that she will knock anyone who is wronged.

யாருக்கு அநியாயம் நடந்தாலும் நான் தட்டி கேட்பேன் என பிரியங்கா தாமரையிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி போட்டியாளர்கள் பஸ்சுக்குள் இருக்க வேண்டும். அவ்வப்போது போட்டியாளர்களுக்கு தடங்கல்கள் கொடுக்கப்படுகிறது. அப்பொழுது ஒவ்வொருவராக இறங்க வேண்டும். அந்த வகையில்  பிரியங்கா தாமரையை இறங்க வைக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார். அப்பொழுது யாருக்கு அநியாயம் நடந்தாலும் நான் தட்டி கேட்பேன் என பிரியங்கா  கூற, மக்கள் என்னை காப்பாற்றுவார்கள் என தாமரை கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node