BIGG BOSS 5 Day 5 : உண்மையிலேயே நமிதா கோபம் கொண்டாரா...? பிரியங்காவுக்கு என்னாச்சி...!

Did the fight between Namitha and Tamara Selvi really happen at the Big Boss house yesterday? Come find out what Ikey Perry's life event is all about.

நேற்று பிக் பாஸ் வீட்டில் உண்மையிலேயே நமிதாவுக்கும், தாமரை செல்விக்கும் சண்டை வந்ததா? ஐக்கி பெர்ரியின் வாழ்க்கை நிகழ்வு என்ன என்பதையெல்லாம் அறியலாம் வாருங்கள்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று 5-வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான 3 புரோமோவில் நேற்று விருவிருப்பான கட்டங்கள் காண்பிக்கப்பட்டது. அதன்படி நிகழ்ச்சியில் முதலில், தாமரைச்செல்வி அழகி போட்டியில் நடப்பது போல நடந்து காண்பிக்கிறார். அதன் பின்பு அருகே அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த திருநங்கை நமிதாவிடம் நீங்கள் மயக்குவது போல நடப்பீர்கள் அல்லவா அதே போல எனக்கு சொல்லிக் கொடுங்கள் எனக் கூறுகிறார்.

unknown node

மீண்டும் நமிதா கண்களால் பார்ப்பது போலவா அல்ல கோபத்துடன் பார்ப்பதா என்று கேட்க இல்ல மயக்குவது போல நடப்பீர்கள் அல்லவா அதை எப்படி என்று சொல்லிக் கொடுங்கள் என கேட்க, நமிதா தாமரை செல்விக்கு சொல்லி கொடுக்கிறார். அதன் பின்பு நிரூப் தலைமையில் அனைவரும் மாஃபியா கேம் ஆடினார்கள். அந்த விளையாட்டில் பிரியங்கா தான் மாஃபியா என கண்டறியப்பட்டது.

unknown node

ஆனால், நமிதா பிரியங்கா தான் மாஃபியா என அறியாமல் இருந்ததால் நமிதாவை அனைவரும் கேலி செய்து சிரிக்க, தாமரைச்செல்வி இந்த பிள்ளை இன்னும் 500 பிள்ளையை கொடுத்தாலும் வளர்த்து விடும் என  சிரித்தார். அப்பொழுது அவ்விடத்திலிருந்து எதுவுமே சொல்லாமல் வெளியேறிய நமிதா அனைவரும் குளியலறைகள் அமர்ந்திருக்கும் பொழுது நாளைக்கு நல்ல சண்டை இருக்கிறது என்று வருணிடம் கூறுகிறார்.

unknown node

அப்போது மீண்டும் தாமரைச்செல்வி 40 அல்ல 400 குழந்தைகளை கொடுத்தாலும் நீ வளர்த்து விடுவாய் என தான் கூறினேன் என்று சிரிக்க, பிரியங்கா தாமரைச்செல்வியிடம் வெறுப்பேற்றுவது போல சிரிக்க வேண்டாம் அக்கா, நமிதாவுக்கு பிடிக்கவில்லை விடுங்கள் எனக் கூறியும் கேட்காமல் மீண்டும் படுக்கையறை சென்றும் தாமரைச்செல்வி சிரித்துக்கொண்டே அமர்ந்திருக்கிறார். இதனால் நமிதா சற்றே கோபம் அடைகிறார். என்னை குறித்து பேசுங்கள் எனது பிள்ளைகளை குறித்து பேச வேண்டாம் எனக் கூறுகிறார்.

unknown node

மேலும் பிரியங்கா உள்ளிட்ட சிலர் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது தாமரைச்செல்வி அங்கே சென்று என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறும் பொழுது, உங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது, எனக்கு தோன்றும் போது நானாக பேசிவிடுவேன். தயவு செய்து இனி இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என நமிதா கூறிவிடுகிறார்.

unknown node

அடுத்த நாள் காலை இது குறித்து தாமரைச்செல்வி இமான் அண்ணாச்சியிடம் சாதாரணமாக இப்படித்தான் கூறினேன் என நடந்ததை சொல்லி முடித்து விடுகிறார். இமான் அண்ணாச்சி சமாதானப்படுத்துவதற்காக நமிதாவை கூப்பிட நமிதா வேண்டாம் பெரியப்பா நான் பிறகு வருகிறேன் எனக்கு தொண்டை வலிக்கிறது என கூறி வெளியேறி விடுகிறார். உண்மையிலேயே நேற்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரச்சனை நடக்காவிட்டாலும் நமிதா மனதளவில் கஷ்டப்பட்டதால் தாமரைச்செல்வியிடம்  தனது கோபத்தை காண்பித்துள்ளார்.

unknown node

இமான் அண்ணாச்சி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் போல கேமரா முன்பதாக செய்து காண்பிக்கிறார். பிரியங்கா பேசுவது போல பெருசு என்ன என பேசியுள்ளார். அக்ஷரா போல நடந்து காண்பித்து, இசைவாணி போல மேக்கப் செய்து கொண்டு இருக்கிறார். எனவே அங்கிருந்து அனைவரும் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதன் பின்பாக பாவனியிடம் இமான் அண்ணாச்சி நமிதா தாமரைச்செல்வி பிரச்சனை குறித்துப் பேசுகிறார். அதன் பின்பு என்ன நடந்தது தெரியுமா…?

பிரியங்காவுக்கு கையில் லேசாக கொசு கடித்து விட்டது. அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது போங்க, பிரியங்கா படுக்கையில் அமர்ந்து இருக்க, நமிதா அவரைப் பார்த்துக் கொள்ள, அங்கு வந்த ராஜு என்ன ஆச்சு பிரியங்கா என்று கேட்க, வேண்டாம் நீ பார்த்த கஷ்டப்படுவேடா என்று பிரியங்கா கூற, அதன் பின்பாக நமிதா பிரியங்காவின் கையை எடுத்துக் காண்பிக்கிறார்.

unknown node

கொசு கடித்து வீங்கி இருக்கிறது. எனவே பிரியங்கா ராஜுவிடம் வெளியில் யாரிடமும் சொல்லிறாத, என்ன இருந்தாலும் நம்ம வேலை பார்க்கும் இடம், நமக்கு பல வருஷம் சாப்பாடு போட்டு இருக்காங்க, வெளியே இன்டெர்வியூலாம் கொடுத்திறாத சத்தியம் பண்ணு என்று நக்கலாக பேசுகிறார். அதன் பின்பு நிரூப்பும் நமிதாவும் சேர்ந்து பிரியங்காவை சமையலறைக்கு வேலை பார்ப்பதற்காக கொண்டு விட்டு விட்டு வருகின்றனர்.

ஐக்கி பெர்ரியின் வாழ்க்கை ….

மிகவும் மகிழ்ச்சியாக இளவரசி போல வாழ்ந்து வந்த ஐக்கி தான் நன்றாக இருந்து திடீரென கீழே விழுந்து விட்டதாக கூறுகிறார். அதாவது தன்னை ஒரு இளவரசி போல கவனித்துக் கொண்ட பெற்றோர்கள் ஒரு உறவில் நான் மாட்டிக்கொண்டு பிரச்சனை பட்டதன் காரணமாக என்னை மொத்தமாக கைவிட்டு விட்டார்கள். யாருக்கும் இது போன்று நடந்து விடக்கூடாது. நான் தமிழச்சி என்பதாலும் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறேன்.

unknown node

இருப்பினும் இப்பொழுது எனக்கு என்று பல சொத்துக்களும் பல விருதுகளையும் நான் வாங்கி வைத்துள்ளேன். ஒருமுறை கிரண் பேடியின் கையால் அவார்ட் வாங்கிய போது எனது பெற்றோர்கள் என்னை அழைத்துப் பேசினார்கள். அதன் பின்பு பேசவில்லை. இருந்தாலும் அவர்கள் எப்பொழுது என்னிடம்  திரும்பி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனென்றால் அவர்கள் எனது பெற்றோர்கள் என கண் கலங்க கூறியுள்ளார்.

பாவனியின் வாழ்க்கை ….

unknown node

பாவனி தனது கணவருடன் தனக்கு ஏற்பட்ட காதல் குறித்தும், தங்கள் சாதித்தவை குறித்தும் எப்படி தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார்? தனது மாமியார் குடும்பம் தனக்கு எப்படி ஆதரவாக இருந்தது என்பது குறித்தும் கலக்கத்துடன் கூற அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அதன் பின் அனைவரும் ஆங்காங்கு அமர்ந்து பேசி சிரிக்க இந்த நாள் நிகழ்வு முடிவடைகிறது.

BIGG BOSS 5 Day 5 : உண்மையிலேயே நமிதா கோபம் கொண்டாரா...? பிரியங்காவுக்கு என்னாச்சி...!