ஒருத்தர் விரல் கூட படாது…ஷங்கர் வார்த்தையை நம்பி ஏமாந்த ‘பாய்ஸ்’ நடிகை புவனேஸ்வரி?

Bhuvaneswari actress boys

Bhuvaneswari கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை புவனேஸ்வரி. இவருடைய கண்கள் பார்ப்பதற்கு பூனைக்கண்கள் போல் இருப்பதால் அந்த சமயமே இவருக்கு பூனைக்கண்ணு புவனேஸ்வரி என்ற பெயரும் கிடைத்தது. இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் இவருக்கு ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.

READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

ஆனால் பாய்ஸ் படத்தில் நடிக்கவே முதலில் நடிகை புவனேஸ்வரி யோசித்தாராம். அந்த அளவிற்கு பயந்தாராம். ஏனென்றால் இந்த படத்திற்கு முன்பு அவர் பல கவர்ச்சியான படங்களில் நடித்திருக்கலாம் ஆனால் பாய்ஸ் படத்தின் இந்த கதாபாத்திரத்தை போல ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்ததே இல்லை.   5 பசங்க ஒரு ரூம்  எப்படி சரியாக வரும் என இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் நம்மளை எப்படி பார்ப்பார்கள் என யோசித்தாராம்.

read more- குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

ஆனால் இயக்குனர் ஷங்கர் ஐந்து பேரில் ஒருவரின் விரல்  கூட உங்களுடைய மேல் படாது அந்த மாதிரி எந்த காட்சியும் படத்தில் இல்லை நீங்கள்  தைரியமாக இந்த கதாபாத்திரத்தை செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல ரீச் கிடைக்கும் என்று கூறினாராம்.  ஷங்கரே இப்படி கூறியவுடன் புவனேஸ்வரி  இந்த கதாபாத்திரத்தில் நாம் நடிப்போம் என்று முடிவெடுத்தாராம். அதேபோலவே அந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றிபெற்று மக்களுக்கு அவருடைய பெயரை தெரிய வைத்தது.

READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை!

அது ஒரு புறம் இருந்தாலும்,  கதாபாத்திரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.  பலரும் அவருடைய கதாபாத்திரத்தை விமர்சிக்க தொடங்கியதால் எதிர்மறையான விமர்சனங்களில் புவனேஸ்வரி சிக்கினார். இதனால் புவனேஸ்வரி சற்று வேதனையும் அடைந்தாராம்.  ஷங்கர் சொல்லி நடித்தோம் இப்படி ஆகிவிட்டது என்று வேதனைப்பட்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai
annamalai ptr
gold price