13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா..? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ஹிட் படங்களில் நடித்து கலக்கி வந்த பாவனா கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'அசல்'

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ஹிட் படங்களில் நடித்து கலக்கி வந்த பாவனா கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘அசல்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

unknown node

Bhavana [Image Source: Twitter ]

கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தமிழில் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் அவர் எப்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பார் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

unknown node

Bhavana Menon [Image Source: Twitter ]

அதன்படி, நடிகை பாவனா 13-ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஆம், இவர் பிக் பாஸ் மூலம் பிரபலமான ணேஷ் வெங்கட்ராமனுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இந்த படம் தமிழ்,  மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்-நீச்சல் குளத்தில் அட்டகத்தி பட நடிகை…வைரலாகும் புகைப்படங்கள்.!

unknown node

BhavanaMenon Smile [Image Source: Twitter ]

விரைவில், இந்த திரைப்படத்தை யார் இயக்க போகிறார், படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மற்ற விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாவனா தமிழ்  சினிமாவிற்கு நடிக்க வந்துள்ளதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா..? உற்சாகத்தில் ரசிகர்கள்.!