நடிகர் விஜய் சேதுபதியின் 46 வது படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குவதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது. இதன் பின் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும்,அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
அதனை உறுதி படுத்தும் வகையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். ஒளிபதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் பணியாற்றவுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறார்.
unknown node