நடிகை பாவனா ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களில் நடித்து கலக்கி வந்தவர். கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘அசல்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
unknown nodeBhavanaMenon Smile [Image Source: Twitter ]
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மலையாளத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
unknown nodeஅந்த வகையில், பாவனா குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் பாவனா மிகவும் அழகாக இருக்கிறார். எனவே புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் அழகோ அழகு என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeBhavana Menon [Image Source: Twitter ]
நடிகை பாவனா 13-ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஆம், இவர் பிக் பாஸ் மூலம் பிரபலமான ணேஷ் வெங்கட்ராமனுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.