வீரப்பன் பற்றிய வெப் சீரிஸை வெளியிட பெங்களூரு நீதிமன்றம் தடை .!
வீரப்பன் குறித்து உருவாக்கப்பட்டிருந்த (வீரப்பன் – கொலைக்கான பசி) வெப் சீரிஸை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த இயக்குரும், தயாரிப்பாளருமான ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்பவர் வீரப்பன் குறித்து “வீரப்பன் – கொலைக்கான பசி” என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றை எடுத்து வருகிறார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடித்துள்ளார்.
இது, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த இந்த வெப் சீரிஸ் வருகின்ற ஜுலை மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இதனை வெளியீட பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் “வீரப்பன் – கொலைக்கான பசி” வெப் சீரிஸை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.