சினிமாவில் தொடர்ந்து நீடிக்க சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது அவசியம் என நடிகை ராஷி கன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வரும் ராஷி கன்னா தற்போது பல படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார். இதற்கிடையில், ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர் ” நடிகைக்கு அழகு முக்கியம்தான். ஆனாலும் அழகை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது” என்று பேசியுள்ளார்.
unknown nodeRaashiiKhanna [Image Source : Google ]
இது குறித்து பேசிய ராஷி கன்னா ” சினிமாவில் தொடர்ந்து நடிகையாக நீடிக்க சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது ரொம்பவே அவசியமான ஒரு விஷயம். ஒரு நடிகைக்கு அழகு மட்டும் முக்கியமில்லை. அதனை மட்டுமே வைத்துக்கொண்டு சினிமாவில் நிலைத்து நிற்க்க முடியாது.
unknown nodeRaashiiKhanna [Image Source : Google ]
அப்படி நிலைத்து நிற்க்கவேண்டும் என்றால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது முக்கியம். அதை நான் இப்போது தான் உணர்ந்துள்ளேன்” என கூறியுள்ளார்.
unknown nodeRaashiiKhanna [Image Source : Google ]
மேலும் நடிகை ராஷி கன்னா கடைசியாக தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைபடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ” யோதா” எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.