பத்து தல மாபெரும் வெற்றி...அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் 30-ஆம் தேதி 1,200 திரையரங்குகளில் வெளியானது.

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் 30-ஆம் தேதி 1,200 திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node

str pathu thala[Image Source : Google ]

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை 42 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்து படம் தோல்வி படம் என வதந்தி தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

unknown node

PathuThala[Image Source : Google ]

அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிக்கையை வெளியீட்டு பத்து தல படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என அறிவித்துள்ளது. அறிக்கையில் ” எங்களின் ‘பத்து தல’ திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக, சிலம்பரசன் (STR) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முழு மனதுடன் எங்களது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறோம்.

unknown node