நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த படத்தை இயக்கும் பால்கி!

Actor Balki will direct Tulkar Salman's next film, which is Tulkar Salman's third Hindi film, directed by balki.

நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த படத்தை இயக்குனர் பால்கி அவர்கள் இயக்கவுள்ளார், இந்த படம் துல்கர் சல்மானின் மூன்றாவது ஹிந்தி திரைப்படம்.

இயக்குனர் பால்கி ஹிந்தியில் அமிதாப் பச்சனை வைத்து பா, சீனிகம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களை இயக்கியவர். அதன் பின் தனுஷ் மற்றும் அமிதாசனை வைத்து ஒன்றாக சேர்த்து இந்தியில் ஒரு படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பெரிதும் புகழப்பட்ட நிலையில் அதன் பின் அக்ஷய் குமாரை வைத்து பேடு மென் என்னும் படத்தை இயக்கினார்.

இந்நிலையில், தற்போது இவரது இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இயக்குனர் பால்கி இயக்கிய படங்களைப் போல் இல்லாமல் இந்த படம் முற்றிலுமாக திரில்லர் படமாக இருக்கும் எனவும் ஊரடங்கு காலத்தில் தான் இந்த படத்திற்கான கதையை எழுதியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதுடன் சேர்த்து துல்கர் சல்மான் ஹிந்தியில் மூன்றாவது படமாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.