இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி. உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeBagheera 2 [Image Source : Google ]
இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான கணேசன் எஸ் இசையமைக்க பரதன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டே இந்த திரைப்படத்திற்கான டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
unknown nodeBagheera Release Date [Image Source : Google ]
இந்த நிலையில், எப்போது படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த “பஹிரா” திரைப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் டிரைலரை வைத்து பார்க்கையில் படம் ஒரு சைக்கோ த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே த்ரில்லர் படம் பார்ப்பவர்கள் இந்த படத்தை பார்க்க செல்லலாம்.