சுல்தான் திரைப்படத்தின் வா சுல்தான் வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை கடந்த 23 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து தினம் தினம் படத்திற்கான மேக்கிங் வீடியோ, ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் தற்போது அடுத்த அட்டட் என்னவென்றால், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா சுல்தான் வா சுல்தான் என்ற வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர். இந்த பாடலின் லேரிக்ஸ் பாடல் யூடியூபில் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node