மென்மையான அனிருத் இசையில் இன்று வெளியாகும் "ரெண்டு காதல்" பாடல்...!

Announcement that the love song of the movie Kaathu Vakkula Rendu Kaadhal Vignesh Sivan and composed by Anirudh released night at 7 pm.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரெண்டு காதல் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான  ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர் .

கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்த படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினமான இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node