உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் அவதார் படத்தின் 2-வது பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. அதுமட்டுமின்றி, 3 ஆஸ்கர் விருதுகளை இந்த படம் அள்ளியது.
unknown nodeAvatarTheWayOfWater[Image Source: Google]
முதல் பாகத்திற்கு அமோகமாக வெற்றி கிடைத்ததால் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கடந்த- 2016 ஆம் ஆண்டு “அவதார் 2” படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாகத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeAvatar The Way Of Water [Image Source: Google]
படத்திற்கான டீசரும், முதல் டிரைலரும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது படத்திற்கான இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் வரும் காட்சிகள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாக அசத்தும் அற்புத காட்சிகள் நிறைந்து, தண்ணீர் தேசத்தில் நடக்கும் பிரச்சனைகள் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.
unknown nodeAvatar The Way Of Water [Image Source: Google]
மேலும், அவதார் 2 படம் இந்த வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில்‘ரோஸ் ‘கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
On December 16, experience the motion picture event of a generation.
Watch the brand-new trailer and experience #AvatarTheWayOfWater in 3D. Get tickets now: https://t.co/9NiFEIpZTE pic.twitter.com/UitjdL3kXr
— Avatar (@officialavatar) November 22, 2022


