அவதார் படத்தின் 2-வது பாகத்தை பார்க்க உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் ஆவலுடன் காத்துள்ளனர் என்றே கூறலாம்.இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. அதுமட்டுமின்றி, 3 ஆஸ்கர் விருதுகளை இந்த படம் அள்ளியது.
unknown nodeAvatarTheWayOfWater[Image Source: Google]
இதனை தொடர்ந்து இரண்டாவது பாகமும் பக்கா பிரமாண்டமாக உருவாகியுள்ளது. படத்திற்கான டீசரும், முதல் டிரைலரும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeAvatar The Way Of Water [Image Source: Google]இதையும் படியுங்களேன்-ஹீரோயின்கள் என்ன குதிரைகளா.? சர்ச்சை பேச்சால் சிக்கிகொண்ட விஜய்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்…
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeAvatarTheWayOfWater [Image Source: Google]
இந்த நிலையில், “அவதார் 2”(AVATAR THE WAY OF WATER)டிக்கெட் முன்பதிவு இந்தியாவில் 10 கோடியை கடந்துள்ளது. படம் வெளியாக இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், வெளியாவதற்கு முன்பே கோடிகளை குவித்து, அதிவேகமாக முன்பதிவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையை இந்த திரைப்படம் படைத்துள்ளது.