தளபதி 66 படத்தை அட்லீ முருகதாஸ் இயக்க வாய்ப்பில்லை- சித்ராலட்சுமணன்

Director Aadli and Murugadoss are not likely to direct Commander 66, said a person from Tenandal Films.

தளபதி66 படத்தை  இயக்குனர் அட்லீ,முருகதாஸ் இயக்க வாய்ப்பில்லை என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

பொங்கல் விருந்தாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தினை இயக்க போவது யார் என்ற‌ கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில் தளபதி விஜயின் 66 வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டாதாகவும் கூறப்பட்டது, அதற்கு பிறகு அந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாகவும், முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகின்ற நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தேணான்டால் பிலிம்ஸ் தயாரிக்கப்போகும் தளபதி66 படத்தை “அட்லீ,முருகதாஸ்” இயக்க வாய்ப்பில்லை எனவும் “லோகேஷ்,நெல்சன்” மாதிரியான அறிமுக இயக்குநர்களுக்குதான் வாய்ப்பு அதிகம் எனவும் அந்த பட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறியதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.