நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் “வணங்கான்”. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், படத்திலிருந்து சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்தார்.
unknown nodearun vijay vanangaan [Image Source : Twitter]
சூர்யா படத்திலிருந்து தான் விலகினார் எனவே படம் ட்ராப் ஆகவில்லை என்றும் வணங்கான் படத்திற்கான வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கும் என்றும், வேறு ஹீரோ படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. அதில் அருண் விஜயின் பெயரும் அடிக்கடி அடிபட்டது என்றே கூறலாம்.
unknown nodeVanangaan BEGINS arun vijay [Image Source : Twitter]
இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் வணங்கான் படத்தின் கெட்டப்பில் அருண் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeArun Vijay Vanangaan [Image Source: Twitter ]
முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் 25 நாட்களுக்கு திட்டமிடப்பட்டது. தற்போது கன்னியாகுமரி கிராமப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ஹீரோயின் யார் இசையமைப்பாளர் யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.