தமிழில் உயிரின் உயிரே,அப்படி போடு, அண்டங்காக்கா கொண்டக்காரி, நினைத்து நினைத்து உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 53.
இவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கே.கே. மரணத்திற்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். இதில் ” அன்புள்ள கேகே.. என்ன அவசரம் நண்பா ..உங்களைப் போன்ற திறமையான பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த வாழ்க்கையை இன்னும் தாங்கக்கூடியதாக ஆக்கினார்கள்” என பதிவிட்டுள்ளார்.
unknown node