மக்கள் செல்வனுடன் இணையும் அனுஷ்கா..!

நடிக விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல்.

நடிக விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல்.

நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது நடித்துள்ள முக்கிய திரைப்படம் மாஸ்டர், படம் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறர்கள், மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தை தொடர்ந்து, மாமனிதன், துக்ளக் தர்பார், மற்றும் பல திரைப்படங் களில் கமிட் ஆகியுள்ளார், இந்த படங்களை தொடர்ந்து தலைவன் இருக்கிறான் இரண்டாம் பாகத்திலும் கமலிற்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

unknown node

இந்த நிலையில் தற்பொழுது விஜய் சேதுபதி அடுத்தாக இயக்குனர் எல் விஜய் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடக்கவுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஐசரி கணேஷன் சேர்ந்து தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது, இதற்கான மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.