ரீ -என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.! புது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!
ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் கடன்ஹா 2015-ஆம் ஆண்டு வெளியான “இஞ்சு இடுப்பழகி” படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் முற்றுலுமாக குறைந்துவிட்டது என்றே கூறலாம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அனுஷ்கா தனது உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்துவருவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராத்திரி அன்று அனுஷ்கா சிவன் கோவில் ஒன்றுக்கு வருகை தந்த வீடியோ வைரலானது.
She has the most beautiful smile..
Such a charming beautiful smile
Her smile can bright me up..✨✨????????#AnushkaShetty pic.twitter.com/vqVYcIKwDC— Vaishnu (@VaishnaliS) February 21, 2023
அந்த வீடியோவால் அனுஷ்கா மிகவும் மெலியாமல் சற்று மெலிந்து உடல் எடை அதிகரித்து தான் காணப்பட்டார். இத்தனை பார்த்த அவருடைய ரசிகர்கள் அனுஷ்காவின் உடல் எடை குறையவே இல்லையே என சற்று அதிர்ச்சியானார்கள். இதனையடுத்து அனுஷ்கா எவ்வளவோ முயற்சி செய்தும் தன்னுடைய உடல் எடையை குறைக்க முடியவில்லையாம்.
எனவே இதற்குமேல் படங்களில் நடிக்காமல் இருந்தால் முழுவதுமாக பட வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்பதால் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் தான் இயக்குகிறார். ஏற்கனவே அவர் ஏ.எல். விஜய இயக்கத்தில் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் விரைவில் அந்த திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் எனவும் முன்னதாகவே ஒரு தகவல் பரவிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தான் விரைவில் தொடங்கப்படவுள்ளதாம். இந்த படத்தில் அவருடைய உடல் எடை சற்று குறைவாக இருப்பது போல எடிட் செய்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் படத்தில் தலைப்பு யாரெல்லாம் படத்தில் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.