கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்... கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..!

The official announcement is that the second song of the Karnan film will be released on March 2

கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆம், வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

unknown node