இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராம் தமிழ் சினிமாவில் பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டப்படமாக இருக்கும்.
இந்த நிலையில் நீண்டகாலமாக படம் எடுக்காமல் இருந்த ராம் தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதாவது அடுத்ததாக இயக்குனர் ராம் நடிகர் நிவின் பாலை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார். நடிகர் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
unknown node