அண்ணாத்த vs பொன்னியின் செல்வன்...இந்த ஆண்டு செம தீபாவளிதான்..!

It has been reported that Rajinikanth's Annatha and Ponni's Selvan will be released on the same day.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான, நடிகர் விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட படத்திற்கான 70% படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை விரைவில் முடித்து விட்டு தீபாவளி தினத்தன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அதைபோல் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் அல்லது இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்மையில் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது அண்ணாத்த திரைப்படமும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.