அண்ணா பண்ணும் அதிரடி வாத்தி யாரு? தளபதி.... மிரட்டலாக வெளியான "வாத்தி ரெய்டு "..!

The Vathi Raid video song featured in the Vijay starrer 'Master' has been released and is getting a good response among the fans.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு வீடியோ பாடலை தற்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது. உலகளவில் தற்போது வரை 248 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு பாடல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ட்வீட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.  மேலும் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான வாத்தி கம்மிங் பாடல் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node