நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் “லைகர்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeபடம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், விஜய் தேவரகொண்டாவும், அனன்யா பாண்டேவும் இணைந்து மும்பையில் உள்ள குடிசை பகுதிக்கு சென்றுள்ளார்கள்.
unknown nodeஏனென்றால், படத்தின் கதை “லைகர்” படத்தின் கதை படி விஜய் தேவரகொண்டா குடிசை பகுதியில் வாழும் குத்துச்சண்டையில் இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பது தான். இதனால் இருவரும் மும்பையில் உள்ள குடிசை பகுதிக்கு சென்று அங்கு இருக்கும் மக்களோடு விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே சிறிய நடனம் ஆடியுள்ளனர்.
unknown nodeபிறகு, மும்பையில் உள்ள ஒரு லோக்கல் ரயிலில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே இருவரும் ஒன்றாக பயணித்து படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டனர். அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#AnanyaPanday and #VijayDeverakonda travel in a #Mumbailocal promoting their upcoming film #Liger pic.twitter.com/kylOULx0vN
— FilmiFever (@FilmiFever) July 29, 2022
View this post on Instagram