சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருந்த நடிகைகளில் ஸ்ரீ லீலாவும் ஒருவர் என்று கூறலாம். இவர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக குண்டூர் காரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. அதிலும் குறிப்பாக ஸ்ரீ லீலா நடித்த கதாபாத்திரம் மற்றும் அவர் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் அவர் ஆடிய நடனம் என்று கூறலாம்.
படத்தில் இடம்பெற்று இருந்த KurchiMadathaPetti பாடலில் சிவப்பு நிற சேலை உடுத்தி கொண்டு அவர் ஆடிய நடனம் பலருடைய கண்களுக்குள் அப்படியே இருக்கிறது என்றே கூறலாம். பாடல் தெலுங்கு பாடல் என்றாலும் கூட ஸ்ரீ லீலா ஆடிய நடனம் எல்லா மொழிகளிலும் பட்டையை கிளப்பி வரவேற்பை பெற்று இருந்தது என்றே சொல்லலாம்.
பாலிவுட் பக்கம் ரொம்ப விமர்சனம்! வேதனையில் உண்மையை உளறிய மிருணால் தாக்கூர்!
அவர் அந்த பாடலில் நடனமாடியதை பார்த்த பலரும் இவர் பெரிய நடன கலைஞராக இருப்பார் போல எனவும் தமிழில் படங்களில் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்கள். அந்த அளவிற்கு அந்த ஒரு பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ஸ்ரீ லீலா ட்ரெண்ட் ஆகி இருக்கிறார். இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீ லீலா தனது சிறிய வயதிலேயே பரத நாட்டியம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் சிறிய வயதிலேயே நடனத்தில் ஸ்ரீ லீலா கலக்குகிறாரரே என கூறி வருகிறார்கள். மேலும் ஸ்ரீ லீலா தற்போது உஸ்தாத் பகத் சிங் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node