இயக்குனர் கௌதம் மேனனுக்கு ஜோடியான அமலாபால்..!

Actress Amalapal has teamed up with director Gautam Vasudev Menon in an episode of the web series Kutty Story.

குட்டி ஸ்டோரி என்கிற ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்துள்ளார்.

சமீப காலமாக ஓடிடி தளத்திற்காக பிரபல இயக்குனர்களும் , பிரபலங்களும் ஆந்தாலஜி படங்களில் நடித்தும் இயக்கியும் வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் பாவ கதைகள் ஒரு பகுதியை இயக்கினார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து நவராசா என்ற வெப்பத்தொடரையும் இயக்கிவருகிறார். இதற்கு முன்பு தற்போது குட்டி ஸ்டோரி என்கிற ஆந்தாலஜி ஒரு பகுதியை இயக்கவுள்ளார். இந்த படம் வருகிற 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது, இதில் இவருக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்துள்ளார்.