அகிலன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் "அகிலன்". இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்தை

நடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் “அகிலன்”. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்து வருகிறார்.

unknown node

இன்று காலை அகிலன் படத்தின் சேட்டிலைட் & டிஜிட்டல் உரிமைகள் ஜீ நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அகிலன் திரைப்படம் வருகின்ற மார்ச் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

Agilan movie [Image Source : Google ]

நீண்ட நாட்களாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது அறிவிப்பார்கள் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது. விரைவில் படத்தின் அடுத்த அப்டேட்டாக ட்ரைலர் மற்றும் பாடல்கள் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

ponniyin selvan 2 [Image Source : Twitter]

மேலும், அகிலன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் நடித்து முடித்துள்ள பிரமாண்ட பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.