மனதை உருக வைக்க வருகிறது “அக நக”.! பொன்னியின் செல்வன் 2 அசத்தல் அப்டேட் இதோ.!

Default Image

பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Ponniyin Selvan Part 2 New Update
Ponniyin Selvan Part 2 New Update [Image Source : Twitter]
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் வருகிறது. படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

AgaNaga
AgaNaga [Image Source : Google ]
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் முதல் பாடலான அக நக என தொடங்கும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்து.

இதனையடுத்து, அதற்கான சிறிய ப்ரோமோ ஒன்றை தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ப்ரோமோவில் வரும் இசையை வைத்து பார்க்கையில் இந்த பாடலும் பெரிய அளவில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்