ஏகே 62 அப்டேட்: 2-வது முறையாக அஜித்திற்கு வில்லனாகும் பிரபல நடிகர்.!

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஏகே 62 படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்பதற்காக ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், படத்தில் இருந்து விக்னேஷ் சிவன்

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஏகே 62 படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்பதற்காக ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாகவும், படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

unknown node

AK 62 Magizh Thirumeni [Image Source : Google ]

எனவே, இதனால் “ஏகே 62 ” படத்தை யார் தான் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  இயக்குனர் மகள் திருமேனி இயங்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது  கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும்,  கூறுகிறார்கள். விரைவில் லைக்கா நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

ak 62 sana [Image Source : Google ]

இதற்கிடையில் அவ்வப்போது “ஏகே 62” படத்தில் நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள் குறித்த தகவலும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்பொழுது அஜித்தின் 62வது திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

unknown node

arun vijay and ajith [Image Source : Google ]

அதன்படி, ஏகே 62 திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளாராம்.  ஏற்கனவே, அவர் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.